சென்னை எழும்பூரில் 'யூனிட்டி' என்று பெயரிடப்படவுள்ள புதிய வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லினைத் தமிழக முதல்வர் நாட்டினார்.
மொத்தம் 69,515.71 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மற்றும் நன்கு மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை 2025-26 ஆம் ஆண்டு வரை தொடர்வதற்கு என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் செவி உணர்திறன் அற்றோர்/காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகளில் (2024) தமிழக வீரர்கள் 14 பதக்கங்களை வென்றுள்ளனர்.