நான்கு மடங்களின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக என்று நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் (HR&CE) முடிவுக்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த ஒரு நீதிப் பேராணை மேல்முறையீட்டினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி (GCC) பிராந்தியத்தின் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவர்களின் செல்லப்பிராணிகளுக்கு நுண்சில்லுகளைப் பொறுத்துவதைக் கட்டாயம் ஆக்குவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அவசர அழைப்புகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட “Save Our Souls” (SOS) பெட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட பெட்டிகளை அமைக்கத் தொடங்கி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதியளவு சுத்திகரிக்கப்பட்டக் கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றியதன் மூலம் “நீர்நிலைகள், நிலத்தடி நீர் மற்றும் வேளாண் நிலங்களுக்கு மீளமுடியாத ஒரு சேதத்தை” ஏற்படுத்தியுள்ளன என்று உச்ச நீதிமன்றமானது தீர்ப்பளித்து, அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பிர்லா மேலாண்மைத் தொழில்நுட்ப நிறுவனம் (BIMTECH) ஆனது, ‘BIMCOIN’ எனப்படும் இந்தியாவின் முதலாவது உள்வளாகப் பயன்பாட்டுத் தொடர் சங்கிலி தொழில்நுட்பம் சார்ந்த நாணயத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் உள்ள குணேரி கிராமத்தின் 32.78 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட, கடல் பகுதி சாராத நிலத்தில் அமைந்த இயற்கையான சதுப்புநிலக் காடுகள் நிறைந்த பகுதியானது, குஜராத் மாநிலத்தின் முதல் பல்லுயிர்ப்பெருக்கப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டில் வெளியிடப் பட்ட முதல் தற்சார்பு சர்வதேச செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு என்ற அறிக்கையானது, செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மீதான மதிப்பீட்டிற்கான புதிய உலகளாவியத் தரத்தினை அமைத்துள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய ஆறு முக்கியப் பெருநகரங்களில் மனிதக் கழிவகற்றல் தொழிலாளர் மற்றும் கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்புத் தொழிலாளர் முறைகளை முழுமையாகத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.