நிதி தொழில்நுட்பத் தளங்களான மொபிக்விக் மற்றும் CRED ஆகியவை மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தினை (CBDC) வழங்கச் செய்கின்ற முதலாவது வங்கி அல்லாத நிறுவனங்களாக உருவெடுத்து, தனது தளங்களில் பயனர்களுக்காக வேண்டி e-ரூபி எனும் பணக்கோப்பினை வெளியிட்டு உள்ளன.
பொது விவகாரங்களில் ஆற்றியப் பங்களிப்புகளுக்காகவும் உலகளாவியத் தளத்தில் இந்தியாவின் கௌரவத்தை மேம்படுத்தியதற்காகவும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூவுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டு உள்ளது.
சுமார் 48,000 சதுர கிலோமீட்டர் பசிபிக் பெருங்கடல் பரப்பினை உள்ளடக்கிய பகுதியினை மார்ஷல் தீவுகள் (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) அதன் முதலாவது தேசியக் கடல் சரணாலயத்தினை அறிவித்துள்ளன.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது, கைத்தறி நெசவாளர்கள் E-Pehchaan இணைய தளத்தையும் மற்றும் கைத்தறி விருதுகளுக்கான ஒரு இயங்கலைத் தொகுதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்த ஒரு மூலக் காரணப் பகுப்பாய்வு (RCA) அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக தொழில்நுட்பக் குறைபாடுகளுக்கான (iSPOT) ஒரு ஒருங்கிணைந்த SEBI இணைய தளம் என்ற இணையதளம் அடிப்படையிலான ஒரு தளத்தினை SEBI அமைப்பு அறிமுகப் படுத்தி உள்ளது.
ஹைட்ரஜனைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டக் குழாய்களை உருவாக்கிய முதல் இந்திய நிறுவனமாக டாடா ஸ்டீல் நிறுவனம் மாறி உள்ளது என்ற ஒரு நிலைமையில் இந்தியாவின் மிக தூய்மையான எரிசக்தி முன்னெடுப்புகளில் மிகவும் முக்கியமான ஒரு படிநிலையைக் குறிக்கிறது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் (MeitY) எண்ணிம இந்தியா பாஷினி பிரிவு (DIBD) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் வடகிழக்கு மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது.
ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் ஒரு இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் தேவே, அதன் புதிய குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஸ்ரீதர் வேம்புவிற்குப் பதிலாக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது இந்திய நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, "Dharohar - Milestones in the Indian securities market- தரோஹர் - இந்தியப் பத்திரச் சந்தையில் புதிய மைல்கற்கள்" என்ற ஒரு எண்ணிம அறிவுக் களஞ்சியத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது மலேசியாவில் (கோலாலம்பூர் நகரம்) நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக் கோப்பையை வென்றது.
இந்தியக் கடற்படையானது, போர்க்களச் செயல்பாட்டுத் தயார்நிலை பயிற்சி (TROPEX-25) எனப்படுகின்ற மிகவும் பெரிய கடல்சார் பயிற்சியைச் சமீபத்தில் ஒரு கடற்படைத் தளமான கர்நாடகாவின் கார்வார் என்ற இடத்தில் நிறைவு செய்தன.