TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 7 , 2025 16 days 79 0
  • கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் ஆனது, MSCI (Morgan Stanley Capital International) இந்தியக் குறியீட்டைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கோடக் MSCI இந்தியா ETF எனப்படுகின்ற நாட்டின் முதல் பரிமாற்ற-வர்த்தக நிதியினை (ETF) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஐதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள பாதுகாப்புசார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தொழில்துறை-கல்வித்துறை சார் சிறப்பு மையம் (DIA-CoE) ஆனது முப்பரிமாண அச்சிடல் முறையிலான பெரிய மாதிரிகளின் உற்பத்தி (LAAM) அமைப்பின் பயன்பாட்டுச் செயல்விளக்கத்தினை மேற்கொண்டது.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் ஊரக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (IRMA) இந்தியாவின் முதல் தேசியக் கூட்டுறவுப் பல்கலைக்கழகமான திரிபுவன் சஹ்காரி பல்கலைக் கழகம் ஆனது நிறுவப்பட உள்ளது.
  • இணையவழி மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் (GIG) ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) திட்டத்தின் கீழ் சுகாதார நல வசதிகளைப் பெற தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 3,000 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) சரக்குகளை ரயில் மூலம் கொண்டு செல்வதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
  • ஐதராபாத்தில் உள்ள இந்தியத் தேசியப் பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) ஆனது நிறுவனப் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்