TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 21 , 2018 2260 days 671 0
  • ஒரு உயர்ந்த நோக்குடைய, நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, இந்தியாவின் நோக்கங்களும் ஒருங்கமைந்த இந்தியாவின் ஐந்து ஆண்டுகால கூட்டுப் பங்காண்மை வரைவுக்கு உலக வங்கி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த செயல்திட்டமானது 25 முதல் 30 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை இந்தியாவிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை உலக தலைமையக கட்டிடத்தின் மேற்கூரையில் சூரிய ஒளித் தகடுகளை நிறுவுவதற்காக இந்தியா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
  • நைஜரின் நியாமேயில் இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் மகாத்மா காந்தி சர்வதேச மாநாட்டு மையத்தை (MGICC - Mahatma Gandhi International Convention Centre) செயல்படுத்த இந்தியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • மத்திய சுகாதார அமைச்சகமானது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முயற்சியில் நிதி நிலை அறிக்கை, செலவு மற்றும் கட்டண தொகை செலுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ‘பட்ஜெட் டேஷ்போர்டு’ என்ற உட்புற உபயோக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்