பிரதமர் புதுதில்லியில் துவாரகா எனுமிடத்தில் சர்வதேச இந்திய சமூகநலக்கூடம் மற்றும் கண்காட்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இம்மன்றம் கட்டி முடிக்கப்படும் போது, இந்தியாவில் மிகப்பெரிய உள்ளரங்க கண்காட்சி மைதானமாகவும், உலகின் முதல் 10 பெரிய இடங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
புகழ்பெற்ற விஞ்ஞானியான கமலேஷ் நீல்காந்த் வியாஸ் அணுசக்தி கழகத்தின் தலைவராகவும் அணுசக்தி துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பாபா அணுஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் வியாஸ், சேகர் பாசு என்பவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசிற்கு சொந்தமான இந்திய அஞ்சலக பணவழங்கீட்டு வங்கியும், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் வீட்டிற்கே சென்று ஆயுள் காப்பீட்டிற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக ஒரு யுக்திசார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
FIFA சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசை வரலாற்றில் முதல்முறையாக இரு அணிகள் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளன. அவர்கள் உலக கோப்பை வெற்றியாளர் பிரான்சும் 2018 உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டியாளர் பெல்ஜியமும் ஆவர்.
புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவராக, சென்னையில் நடந்த அதன் பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ம் ஆண்டு வரையில் 3 வருட காலத்திற்கு அவரது பணிக்காலம் இருக்கும். கடந்த 9 வருடங்களாக பதவியிலிருக்கும் A. அழகப்பன் என்பவருக்குப் பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கிர் காடுகளில் உள்ள தால்கனியா வரம்பில் ஒரு வார காலத்திற்குள்ளாக ஏறக்குறைய 11 சிங்கங்கள் இறந்துள்ளன. 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கிர் காடுகள் 520 சிங்கங்களுக்கான புகலிடமாகும்.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் மும்பையில் பிரியதர்சினி உலகளாவிய நிறுவன விருதின் 34வது ஆண்டுவிழாவின் போது பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு சிறந்த நடிகருக்கான ஸ்மிதா படீல் விருது வழங்கி கௌரவித்தார்.
டெல்லியின் நிதி ஆணையரான அனிந்தோ மஜும்தார் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.