அகில இந்திய வானொலியில் (AIR) இந்தியா சுதந்திரம் பெற்றதனைத் தமிழர்களுக்கு அறிவித்த, 102 வயதான செய்தி வாசிப்பாளர் R.S.வெங்கட்ராமன் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் SIPCOT தொழில்துறைப் பூங்காவில் TP சோலார் லிமிடெட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் ஒரே தொகுதியில் அமைந்த 4.3 GW சூரிய மின்கலம் மற்றும் உற்பத்தி ஆலையினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
குஜராத் மாநில அரசானது, மதிப்பீட்டினை மேற்கொண்டு மாநிலத்திற்கான பொது உரிமையியல் சட்ட (UCC) வரைவினை உருவாக்குவதற்காக ஓர் உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய நாடானது, தொற்று மற்றும் தொற்றாத நோய்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஃபரிதாபாத்தில் (அரியானா) உள்ள மருத்துவத் தகவல் பரிமாற்றம் சார்ந்த சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (THSTI) மர நாய்களை ஒரு விலங்கு சோதனை மாதிரியாகப் பயன்படுத்தும் தனது முதல் ஆராய்ச்சி மையத்தினைத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற பங்குதாரர் நாடுகள் உகாண்டாவில் எபோலா பாதிப்பிற்கு எதிரான தடுப்பூசிக்கான முதல் மருத்துவச் செயல்திறன் சோதனையைத் தொடங்கியுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான நிதிநிலை மீதான ஒதுக்கீட்டிற்கு இந்தியா 37.64 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கு தங்கள் வழக்கமான நிதி ஒதுக்கீடுகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்திய 35 உறுப்பினர் நாடுகளின் "மதிப்புமிக்க பட்டியலில்" இந்தியா இணைகிறது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, அர்ஜென்டினாவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து (WHO) விலகுவதாக அறிவித்துள்ளது.
சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் செயற்கை ஒளிச்சேர்க்கையைப் பயன்படுத்தி, ஆக்ஸிஜன் மற்றும் விண்வெளி ஏவுகல எரிபொருளை வெற்றிகரமாக உற்பத்தி செய்துள்ளனர்.
மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக ஒன்றிணைவதன் பெரு மதிப்பையும், பல்வேறு வகைகளிலான ஒற்றுமையின் பெரு முக்கியத்துவத்தையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 04 ஆம் தேதியன்று சர்வதேச மனித சகோதரத்துவ தினம் அனுசரிக்கப்படுகிறது.