தமிழ்நாடு துணை முதல்வர், திருச்சி பறவைப் பூங்கா மற்றும் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள கம்பரசம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பறவைக் கூடத்தை/ பண்ணையினைத் திறந்து வைக்க உள்ளார்.
108 மருத்துவ அவசர ஊர்திகளின் பெரும் வலையமைப்பானது, மருத்துவ அவசர நிலைகளுக்காக வேண்டி மருத்துவ அவசர ஊர்தி சேவைகளை தேடுபவர்கள் தங்கள் கைபேசிகளில் அந்த வகை வாகனங்களைக் கண்டறிய உதவும் வகையில் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு 'அவசரம் 108 தமிழ்நாடு' என்ற செயலியினை அறிமுகப்படுத்தி உள்ளது.
அரிய, அருகி வரும் மற்றும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள தாவர இனங்களை மிகை குளிரூட்டல் பதங்காப்பு மூலம் வளங்காப்பதற்காக வேண்டி, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் (TNAU) குளிர்முறைப் பதனூட்டல் வசதிகளுடன் கூடிய உள்நாட்டு தாவர இனங்களின் விதை சேகரிப்பு பெட்டகத்தினை நிறுவுவதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனமானது, பெங்களூருவில் உள்ள CII யங் இந்தியன்ஸ் (Yi) என்ற நிறுவனத்துடன் இணைந்து, பார்வைத் திறன் அற்றவர்களுக்கான பிரெய்லி எழுத்து முறையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பதிப்பை வெளியிட்டுள்ளது.
GMR ஏர்போர்ட்ஸ் லிமிடெட் (GAL) நிறுவனமானது, பெருநிறுவன நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மிக நன்கு வலுப்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
சோலன் மாவட்டத்தில் உள்ள தபோட்டாவில் அமைக்கப்பட உள்ள வட இந்தியாவின் முதல் 1 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் ஆலைக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் விரைவு வர்த்தகப் புத்தொழில் நிறுவனமான செப்டோ, சென்சார் டவர் நிறுவனத்தின் ஆய்வின் படி, KFC மற்றும் டோமினோஸ் ஆகிய நிறுவனங்களை விஞ்சி உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது உணவு மற்றும் பான விற்பனைச் செயலியாக மாறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சிகளில் ஒன்றான 38வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளாவானது, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் எனுமிடத்தில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இருந்து (UNHRC) விலகுவதாக இஸ்ரேல் அரசும் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியானது தொடர்ந்து மூன்றாவது முறையாக 2025 ஆம் ஆண்டு ICC மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.