வருண் சக்ரவர்த்தி, ஃபரோக் இன்ஜினியருக்கு (36 வயது, 138 நாட்கள்) அடுத்தபடியாக, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இந்தியாவின் இரண்டாவது வயதான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இன வன்முறை வெடித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தின் முதல்வர் N. பிரேன் சிங் இராஜினாமா செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐந்து நாட்கள் அளவிலான 16வது ஏரோ இந்தியா 2025 கண்காட்சியானது பெங்களூருவில் உள்ள ஏலஹங்கா இந்திய விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையிலான சைக்லோன் 2025 எனப்படுகின்ற மூன்றாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது ராஜஸ்தானில் தொடங்கியது.
மனுஷ் ஷா மற்றும் தியா சிட்டாலே ஆகியோர் முறையே 2025 ஆம் ஆண்டு தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டங்களை வென்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவினை "அமெரிக்க வளைகுடா" என்று அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளதோடு, பிப்ரவரி 09 ஆம் தேதியினை "அமெரிக்க வளைகுடா தினம்" என்றும் அறிவித்துள்ளார்.
OpenAI நிறுவனத்தின் ChatGPT Gov என்பது அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு OpenAI நிறுவனத்தின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அணுகுவதற்கான சில கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ChatGPT வசதியின் புதிய வடிவமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.