மக்களவையில் தற்போது உள்ள 10 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புச் சேவைகளை போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, சமஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய ஆறு புதிய மொழிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற தலைப்பிலான 2025 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாடு (WGS) ஆனது துபாயில் நடைபெற்றது.
உலகப் போர்களின் போது வெளிநாட்டு நிலங்களைப் பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக பிரான்சின் மார்சேயில் உள்ள மசார்கியூஸ் போர் கல்லறைக்கு இந்தியப் பிரதமர் விஜயம் செய்தார்.
இராஜஸ்தானிலுள்ள 132 ஆண்டுகள் பழமையான ஃபோய் சாகர் ஏரி தற்போது வருண் சாகர் என்றும், 113 ஆண்டுகள் பழமையான மன்னர் எட்வர்ட் நினைவு பவன் ஆனது தற்போது மகரிஷி தயானந்த் விஷ்ராந்த் கிரி என்றும் மறுபெயரிடப் பட்டுள்ளன.
துளசி கப்பார்ட் அமெரிக்க தேசியப் புலனாய்வு இயக்குநராக பதவியேற்றதையடுத்து, அமெரிக்க உளவுத்துறைக்கு தலைமை தாங்கிய முதல் இந்து என்ற பெருமையினைப் பெற்றுள்ளார், ஆனால் இவருக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை.