தமிழ்நாடு அரசாங்கமானது சிறப்பு வாய்ந்த 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக் குறிஞ்சி மலரின் (Strobilanthus kunthianus) தாவரங்களை பாதுகாப்பதற்காக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. நீலக் குறிஞ்சி தாவரங்களை வணிக ரீதியாக பொதி கட்டுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக இத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்திய காப்பீட்டு மற்றும் ஓழுங்காற்று வளர்ச்சி முகமையானது (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) காப்பீட்டில் ஏற்படும் முக்கிய ஒழுங்குமுறை பிரச்சனைகள் மற்றும் நிதித் தொழிநுட்பத்தில் (Financial-technology) ஏற்படும் இடைவெளி ஆகியவை குறித்து ஆராய்வதற்காக, தனது தலைமைப் பொது மேலாளரான ரன்தீப் சிங் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.