தமிழக முதல்வர், திருச்சி மற்றும் மதுரையில் மொத்தம் 717 கோடி ரூபாய் செலவில் TIDEL தொழில்துறைப் பூங்காக்களை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
ஐக்கியப் பேரரசு அரசானது, ஐக்கியப் பேரரசு - இந்தியா இடையிலான முக்கிய வணிக உறவுகளுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக வேண்டி டாடா குழுமத் தலைவர் N.சந்திரசேகரனுக்கு கௌரவ வீரத்திருத்தகை (நைட்ஹூட்) விருதை வழங்கியுள்ளது.
இந்தியாவின் நான்காவது தலைமுறை நுட்பத்திலான ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் ஆன 'மத்ஸ்யா-6000' ஆனது, மனிதப் பாதுகாப்பு, அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் அறிவியல் சாதனங்களின் தாங்கு திறன் சோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஈரப்பத சோதனையை வெற்றிகரமாக நிறவு செய்துள்ளது.
கேரள மாநில அரசானது, கடலடி சூழல் சார்ந்த அவசரநிலைகளுக்கு நடவடிக்கையை மேற்கொள்வதற்காகத் தயாராக உள்ள அதிகப் பயிற்சி பெற்ற 17 அதிகாரிகளைக் கொண்ட "கனெட்ஸ்" எனப்படும் இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ஸ்கூபா டைவிங் தீயணைப்பு குழுவினைத் தொடங்கி வரலாறு படைத்துள்ளது.
இந்தோனேசிய நாட்டு அணியானது, சீன மக்கள் குடியரசை வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டு பேட்மிண்டன் ஆசியக் கலப்பு அணி சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்றுள்ளது.
உலகின் அதிகளவில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா சமீபத்தில் வெடித்தது.