TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 21 , 2025 2 days 35 0
  • ‘தமிழ் தாத்தா’ என்று பிரபலமாக அழைக்கப் படும் உ. வே. சுவாமிநாதரின் பிறந்த நாள் (பிப்ரவரி 19) ஆனது தமிழ்நாட்டில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக வெகுவாகக் கொண்டாடப் பட்டது.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தமிழ் கவிஞரும் ஒரு தத்துவ ஞானியுமான திருவள்ளுவரின் சிலையை இந்தியத் தூதர் திறந்து வைத்துள்ளார்.
  • T20 உலகக் கோப்பை போட்டியில் வென்ற இந்தியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் உறுப்பினரான சென்னையைச் சேர்ந்த G. கமலினி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) போட்டியில் அறிமுகமான மிகவும் இளம் வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான 23வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்  போட்டியில் 30 அணிகளில் சுமார் 1,476 மாற்றுத் திறனாளி தடகள வீரர்கள் 155 போட்டிகளில் போட்டி இடுவதன் மூலம் 2025 சென்னை பதிப்பு ஒரு புதிய சாதனையினை படைத்துள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 150 ஆண்டுகால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் மிகவும் ஒரு தனித்துவமான திறந்தவெளி ஓவிய அருங்காட்சியகமான இந்தியாவின் முதல் “திறந்தவெளி சுவரோவிய அருங்காட்சியகம்” ஆனது டெல்லியில் உள்ள “மௌசம் பவனில்” திறக்கப்பட்டுள்ளது.
  • இந்திய மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் தொழில்துறை மீதான சங்கமானது (REIAI) புது டெல்லியில் “கழிவு மறுசுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் 2025” குறித்த ஒரு தேசிய மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
  • வேளாண் மற்றும் நன்கு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது, ஜெர்மனியில் நடைபெற்ற BIOFACH 2025 நிகழ்வில் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி இயற்கை வேளாண் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் உடனான இந்தியாவின் இயற்கை முறை மரபைக் காட்சிப்படுத்தியது.
  • இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் நகரின் திருநர் சமூகத்தைச் சேர்ந்த காடிபதி சலோனி நாயக்கின் முக்கிய ஒரு வழிகாட்டியான அனிதா பாயின் நினைவாக அஜ்மீர் நகரானது முதலாவது அகில இந்தியத் திருநர்கள் மாநாட்டை நடத்தியதில் 2,000 பேர் கலந்து கொண்டனர்.
  • முன்னணிக் கடன் மேலாண்மை தளமான CheQ ஆனது, செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் CheQ Wisor எனப்படும் நாட்டின் முதல் கடன் அட்டை நிபுணரை அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • மத்தியப் பட்டு வாரியம் ஆனது, பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த SILKTECH-2025 எனப்படும் ஒரு சர்வதேச மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தி வருகிறது.
  • இந்தியக் கடற்படையானது, LSAM 11 எனப்படுகின்ற படைத் தடவாளத்துடன் கூடிய ஒரு எறிகணையைக் கொண்ட தனது எட்டாவது இழுவைப் படகினை மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பிரதமர், சமூகத்தில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைப்பதற்காக "கட்டுப்பாட்டு குறைப்பு ஆணையம்" அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது, இந்தியாவில் மிக முதல் முறையாக, முறையே உயர் தர சங்கோலா மற்றும் பக்வா ரக மாதுளைகளின் வணிக ரீதியான சில சோதனைத் தொகுப்புகளை கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியுள்ளது.
  • டெல்லியில் உள்ள இந்துக் கல்லூரி சமீபத்தில் தனது 126வது ஸ்தாபனத் தினத்தைக் கொண்டாடியது.
  • முதலாவது ஒலிம்பிக் மின்னணு விளையாட்டுப் போட்டிகள் ஆனது, 2027 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்