மத்திய அரசாங்கமானது, தலைமைப் பொருளாதார ஆலோசகரான (CEA) V.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலத்தினை 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவையானது, புதிய சட்ட மன்றத்தின் முதல் அமர்வில் மத்திய அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை அமல்படுத்துவதற்கும் 14 CAG அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனமானது, போர் விமானங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு (CATS) - Warrior என்ற முழு அளவிலான சோதனை இயந்திர தரை வழி ஓட்டச் சோதனையினை நடத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது.
கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை மெத்தனோட்ரோபிக் (சாணவளியுண்ணி) பாக்டீரியாவைப் பயன்படுத்தி தூய்மையான உயிரி எரிபொருளாக மாற்றுவதற்கான மேம்பட்ட உயிரியல் முறையை உருவாக்கியுள்ளனர்.
கூகிள் நிறுவனத்தின் டீப் மைண்ட் ஆய்வக நிறுவனமானது, தற்போதுள்ள மிகவும் பெரும்பாலான கருவிகளை விடவும், அதிக நாட்களுக்கு முன்னதாகவும் வானிலையை முன்னறிவிக்கக்கூடிய GenCast எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியினை வெளியிட்டுள்ளது.
ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், டை எத்தில் ஹெக்ஸைல் தாலேட் (DEHP) நெகிழியாக்கியினை சிதைப்பதற்காக வேண்டி சல்போபாசிலஸ் அமிலோபிலஸால் எனப்படும் மண் பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப்படும் ஈஸ்டெரேஸ் நொதியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2025 ஆம் ஆண்டின் வரைவு விதிமுறைகள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடு ஆனது, அந்த வரைவை எதிர்க்கின்ற வகையில் தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய சில மாநிலங்களின் பங்களிப்புடன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
மத்திய அரசு ஆனது, புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான தலைமைத் தகவல் அதிகாரி (CIO) மாநாட்டில் எண்ணிம நிறுவன அடையாளக் கையேட்டை (DBIM) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியக் கடற்படையின் INSV தரிணி என்ற கப்பல், நவிகா சாகர் பரிக்ரமா II எனப் படும் உலகளாவியச் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது மற்றும் மிகவும் சவாலான ஒரு கட்டத்தை முடித்து கனடாவின் போர்ட் ஸ்டான்லியில் நுழைந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கலை எதிர்த்தல் (NMFT) தொடர்பான நான்காவது மாநாடு ஆனது ஜெர்மனியில் நடைபெற்ற நிலையில் இதில் புது டெல்லியில் நிரந்தர NMFT செயலகத்தினை நிறுவ இந்தியா முன்மொழிந்துள்ளது.
28 வது கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில், 543 இனங்களுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்காளம் முன்னிலை வகிக்கிறது.
தொழில் துறை வல்லுநர்கள் குழுவால் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவப் பட்ட மங்களூருவில் உள்ள கர்நாடகா வங்கி லிமிடெட் (KBL) நிறுவனமானது, சமீபத்தில் தனது 100 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.
புது டெல்லியில் நடைபெற்ற 100வது SKOCH உச்சி மாநாட்டில், நாகாலாந்து மாநில வன மேலாண்மை திட்டத்திற்கு (NFMP) 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க SKOCH விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாம்பாக்ஸ் சீபா (சிவப்பு பட்டு பருத்தி மரத்தின்) என்ற மலர்களின் கண்கவர் அழகினை மிக நன்கு கொண்டாடும் விதமாக இரண்டு நாட்கள் அளவிலான 2வது சிமோலு திருவிழா கொண்டாடப்பட்டது.