TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2025 43 days 116 0
  • ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி பற்றிய தகவல்களை அறிய உதவும் வகையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்திற்காக APPA (Anaithu Palli Parent Teachers Association) என்ற செயலியை தமிழ்நாடு முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கும் வகையிலான 'அமுத கரங்கள்' திட்டம் ஆனது கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் விளையாட்டுத் துறை வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், இந்தியாவில் உருவாக்குதல் சவால் தொடர் 1 - Create in India Challenge Season 1 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாரத் டெக் ட்ரையம்ப் திட்டம் (TTP) ஆனது தொடங்கப்பட்டுள்ளது.
  • புது டெல்லியில் நடைபெறும் 98வது அகில பாரதிய மராத்திய சாகித்ய சம்மேளனம் என்பதனை (அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு) இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • ஒரு இந்திய-அமெரிக்கரான காஷ் படேல் அமெரிக்காவின் புதிய மத்தியப் புலனாய்வு வாரிய (FBI) இயக்குநராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.
  • மாலத்தீவின் மாலே எநனுமிடத்தில் நடைபெற்ற 13வது ஆளுகைக் குழுக் கூட்டத்தில், வங்காள விரிகுடாவில் அரசுகளுக்கிடையேயான அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
  • குஜராத் நிதியமைச்சர் தேசிய eVidhan செயலி (NeVA) மூலமாக முதன்முறையாக சட்ட மன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை முழுவதும் ஒரு எண்ணிம முறையில் தாக்கல் செய்துள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, எண்ணிம உலகிலும் நேரடி உலகிலும் பரிமாறப் படும் படங்கள் மற்றும் மொழி ஆகிய இரண்டையும் நன்கு புரிந்து கொண்டு, ஒரு செயலியைப் பயன்படுத்துதல் அல்லது ஒரு எந்திரத்தினை நகர்த்துதல் போன்ற சில பணிகளை மேற்கொள்ள மேக்மா எனப்படும் ஓர் அடிப்படை மாதிரியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள அதிகளவில் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் டுகோனோ சமீபத்தில் வெடித்தது.
  • இராஜஸ்தான் மாநிலம் பருவநிலை மாற்றத் தகவமைப்புகள், காடுகள், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல் "பசுமை சார் நிதிநிலை அறிக்கையினை" தாக்கல் செய்துள்ளது.
  • அசாமின் வளங்கப்பாளர் பூர்ணிமா தேவி பர்மன், வனவிலங்கு வளங்காப்பில் அவர் ஆற்றிய சிறப்பானப் பங்களிப்பிற்காக டைம்ஸ் இதழின் 2025 ஆம் ஆண்டின் சிறந்தப் பெண்மணியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top