டெல்லியின் இந்திரபிரஸ்தா தகவல் தொழிநுட்பக் கல்வி நிறுவனமானது, நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்புத் திறனின் பல்வேறு வடிவங்களை நிகழ்நேரத்தில் நன்கு புரிந்து கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் AMRSense எனப்படும் தரவு ஒருங்கிணைப்பு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுக் கருவிகளை உருவாக்கி உள்ளது.
கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையம் (GOX) ஆனது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு சபையின் (NSCI) 2024 ஆம் ஆண்டு பாதுகாப்பு விருது விழாவில் 'சேவைத் துறை' பிரிவின் கீழ் "சர்வஸ்ரேஷ்த சுரக்சா புரஸ்கார் (தங்கக் கோப்பை)" பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாறியுள்ளது.
பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஆதிக்கச் சாதியினருக்கு மட்டும் வழங்கப்படும் தேர்ந்தெடுக்கப் பட்ட தெரிவுநிலை முறையானது (பெயருக்குப் பின் சாதியின் பெயர் சேர்ப்பது) தலித்துகளுக்கு சமூக மதிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கேற்பை மறுத்து, சமத்துவமின்மையை மிக நன்கு வலுப்படுத்துகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கூறியது.
ரங்கோலி (பூக்கோலங்கள்) கோலங்கள் மற்றும் தஞ்சாவூர் ஓவியத்தில் நிபுணத்துவம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த மங்கலம் ஸ்ரீனிவாசனுக்கு, இத்துறையில் அவர் ஆற்றிய சிறந்த சாதனைகளுக்காக ஒன்பதாவது இராணி மா கைடின்லியு விருது வழங்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,000 முதலமைச்சர் ‘முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
இது நுகர்வோருக்கு சுமார் 20% முதல் 90% வரையிலான தள்ளுபடிகளுடன் கூடிய குறைவான விலையில் 25% வரை கூடுதல் தள்ளுபடியுடன் பொதுப்பெயர் கொண்ட மருந்துகளை வழங்குகிறது.