TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2025 36 days 121 0
  • இந்திய அரசாங்கத்திற்கு கடந்தப் பத்து ஆண்டுகளில் வாகனப் பாதுகாப்பு குறித்தத் தரங்களை மேம்படுத்தவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, இந்தத் துறையின் மிக உயரிய விருதான 2025 ஆம் ஆண்டு பிரின்ஸ் மைக்கேல் தசாப்த சாலைப் பாதுகாப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டு சுழற்சிக்கான யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளப் பட்டியலில் சேர்ப்பதற்காக வேண்டி மராத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அசாதாரண கோட்டை மற்றும் இராணுவ அமைப்பைக் குறிக்கும் 'மராத்திய இராணுவ நிலப்பரப்புகளை' இந்தியா பரிந்துரைத்துள்ளது.
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது, மேற்கு வங்காளத்தின் கடற்கரையில் 'சாகர் கவாச்' பயிற்சியை மேற்கொண்டது.
  • ஐக்கியப் பேரரசிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வணிக உறவுகளை மிக நன்கு மேம்படுத்தியதற்காக என்று பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டல் கௌரவ வீரத் திருத்தகை (நைட்ஹூட்) பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
  • மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் (KNP) கூண்டில் வைக்கப்பட்டு பின் பாதுகாக்கப்பட்ட மேலும் ஐந்து சிவிங்கிப் புலிகள் "காட்டிற்குள்" விடப் பட்டன என்ற நிலையில் இதன் மூலம் தற்போது அங்கு காட்டில் விடுவிக்கப்பட்டுள்ள பெரும்பூனை இனங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்