அரக்கோணத்தில் உள்ள மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட் சேர்ப்பு பயிற்சி மையம் (RTC) ஆனது, சோழ இளவரசரின் நினைவாக, இராஜாதித்ய சோழன் (RTC) தக்கோலம் (ராணிப் பேட்டை மாவட்டம்) என மறுபெயரிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆனது ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் அறிஞருமான R. பாலகிருஷ்ணனை சர்வதேச தமிழ் ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 'களங்கரை' எனப்படும் ஒரு விரிவான போதைப்பொருள் அடிமையாதல் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
2025-26 ஆம் கல்வியாண்டு முதல் அந்த மாநிலத்தில் உள்ள CBSE, ICSE, IB மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்டப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் அரசு ஆனது, அதன் அனைத்துப் பள்ளிகளிலும், அவற்றின் வாரிய இணைப்பு எதுவாக இருந்தாலும், 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி மீதானப் பாடத்தினை ஒரு முக்கியப் பாடமாக கட்டாயமாக்கியுள்ளது.
முதலாவது மகளிர் அமைதி காப்புப் படையினர் மாநாடு ஆனது 'Women in Peacekeeping: A Global South Perspective' என்ற கருத்துருவுடன் புது டெல்லியில் நடைபெற்றது.
இந்திய அரசானது, சமூக நீதிக்கான உலகளாவியக் கூட்டணியின் கீழ் சமூக நீதி குறித்த முதல் பிராந்திய பேச்சுவார்த்தையினை புது டெல்லியில் நடத்தி வருகிறது.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானின் வீரரை தோற்கடித்து, இந்தியாவின் பங்கஜ் அத்வானி 2025 ஆம் ஆண்டு ஆடவருக்கான ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்றார்.
மிக நல்ல ஆரோக்கியத்திற்கு நமது உணவில் புரதத்தினை உள்ளடக்கச் செய்வதன் ஒரு பெரும் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று உலகப் புரத தினம் கொண்டாடப்படுகிறது.