TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 13 , 2025 20 days 91 0
  • செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுக்காவில் 515 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் ஒரு உற்பத்தி மையத்தினைத் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
  • சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வனப் பகுதிகளின் இணைப்புடன் விரிவாக்கப்பட்ட மயிலாடுதுறை வனச்சரகம் ஆனது, ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்க ள்ளது.
  • 14,500 உள்நாட்டுத் தாவரங்கள் மற்றும் மர இனங்கள் மற்றும் 3,20,000 நதிக்கரைப் புற்கள் இனங்களைக் கொண்ட அம்ருத் பல்லுயிர்ப் பெருக்கப் பூங்கா புது டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.
  • மாண்டினீக்ரோவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
  • கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்தப் பேராசிரியர் சுமன் சக்ரவர்த்திக்குப் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் யுனெஸ்கோ அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான TWAS விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவற்றின் சிறப்புப் படைகளுக்கு இடையில் கஞ்சர் - XII எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது கிர்கிஸ்தானின் டோக்மோக் நகரில் நடைபெற்று வருகிறது.
  • இந்தியக் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, கடந்த ஆண்டு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த தனது முடிவை மாற்றிக் கொண்டு, தனது 40வது வயதில் தேசிய அணியில் மீண்டும் பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்