உதகமண்டலத்தில் உள்ள நீலகிரி நூலகத்தில் 2025 ஆம் ஆண்டு ஊட்டி இலக்கிய விழா தொடங்கியுள்ளது.
INS சுஜாதா, INS ஷர்துல் மற்றும் ICGS வீரா ஆகியவற்றைக் கொண்ட இந்தியக் கடற் படையின் முதல் பயிற்சிப் படை (1TS) ஆனது, தாய்லாந்து நாட்டின் ஃபூகெட் ஆழ்கடல் துறைமுகத்திற்கான தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அசாம் மாநில அரசானது, IN-SPACE நிறுவனத்துடன் இணைந்து ASSAMSAT எனப்படும் அதன் சொந்தச் செயற்கைக்கோளினைக் கட்டமைக்கும் திட்டத்தை முன் மொழிந்து உள்ளது.
சுற்றுலா சேவை வழங்கீட்டு நிறுவனங்கள், பயணச் சேவை வழங்கீட்டு முகமைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட உலகளாவியத் தொழில்துறைக்கான ஒரு முக்கியச் சந்திப்புத் தளமாக விளங்கும் சர்வதேச சுற்றுலா வர்த்தகக் கண்காட்சி- பெர்லின் - ITB பெர்லின் 2025 நிகழ்ச்சியில் இந்தியா சமீபத்தில் பங்கேற்றது.
உலகளாவிய போதைப் பொருள்கள் தொடர்பான விவகாரங்களுக்கான முதன்மை கொள்கை உருவாக்க அமைப்பான ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் ஆணையம் என்பதின் (CND) 68வது அமர்வின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டு ள்ளது.
தெஹ்ரானில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரான் அணியினை வீழ்த்தி இந்திய அணி பட்டத்தை வென்றது.
இதுவரையில் நடைபெற்ற ஆறு போட்டிகளுள், இந்தியா தற்போதைய பட்டத்துடன் ஐந்து போட்டிகளில் பட்டத்தை வென்றுள்ளது.