TuTr ஹைப்பர்லூப் எனப்படுகின்ற இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் புத்தொழில் நிறுவனமானது, இந்தியாவில் அதிவேகப் போக்குவரத்தினை (ஹைப்பர் லூப்) வணிகமயமாக்குவதற்கு என பல சர்வதேச மற்றும் தேசியப் பங்குதாரர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
தமிழ்நாடு மாநில அரசானது, ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு "துவரம் பருப்பு" மற்றும் பாமாயில்/சமையல் எண்ணெய் வழங்கப்படுகின்ற சிறப்புப் பொது விநியோக முறையைத் தொடர முடிவு செய்துள்ளது.
பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் ஆனது, இந்தியாவில் பரவலான செயற்கைக்கோள் அகலப்பட்டை சேவைகளைத் வழங்குவதற்காக என்று ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி (AAHAR 2025) எனும் B2B நிகழ்ச்சி ஆனது இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் (ITPO) புது டெல்லியில் ஏற்பாடு செய்யப் பட்டது.
மூன்றாவது "சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு குறித்த சர்வதேசக் கருத்தரங்கு (ISHTA 2025)" ஆனது சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியக் கடற்படை மற்றும் வங்காளதேசக் கடற்படைகளுக்கு இடையேயான 4வது இருதரப்புப் பயிற்சியான போங்கோசாகர்-23 மற்றும் இரு நாட்டுக் கடற்படைகளின் 6வது ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது (CORPAT) வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டன.
ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவின் போர்க் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு கடல்சார் பாதுகாப்பு மண்டல கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றன.