வங்கி சாரா நிதி நிறுவனமான IFL ஃபைனான்ஸ் நிறுவனமானது, மகளிர் தினத்தினை முன்னிட்டு, ஏற்கனவே உள்ள ஏழு கிளைகளை அனைத்து மகளிர் பணியாளர்களைக் கொண்ட 'சக்தி' வங்கிக் கிளைகளாக மாற்றியுள்ளது.
பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டமானது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி நிலவரப்படி, சூரிய சக்தியில் இயங்கும் 10 லட்சம் வீடுகளை நிறுவி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL) நிறுவனமானது மெட்ரோ ரயில் நிலையம் கட்டமைப்பதற்காக வேண்டி இரண்டு கோயில்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தினை தொடர்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பொது நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதில் இருந்து விலகுவதற்கு மத நிறுவனங்களுக்கு எந்தச் சிறப்பு உரிமையும் இல்லை என்றும் அது தீர்ப்பளித்து உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள சுழற்சங்கங்கள் (ரோட்டரி) வழங்கும் பல்வேறு சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 13 ஆம் தேதியன்று உலகச் சுழற் சங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.