TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2025 15 days 88 0
  • தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து M. அப்பாவுவை நீக்கக் கோரி அ.தி.மு.க. கட்சியினால் அவையில் முன் வைக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக 154 வாக்குகளும், ஆதரவாக 63 வாக்குகளும் கிடைத்து, 91 வாக்குகள் வித்தியாசத்தில் அது தோல்வியுற்றது.
  • ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு இடையில் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள இராமேஸ்வரம் தீவில் வலசை போதலின்போது இடைநிற்கும் செந்நாரைகளுக்காக (ஃபிளமிங்கோ) என சரணாலயத்தினை அமைக்க தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.
  • மும்பை இந்தியன்ஸ் அணியானது, டெல்லி கேபிடல்ஸ் அணியினை வீழ்த்தியதை அடுத்து, மூன்று போட்டித் தொடர்களில் இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.
  • நீர் வளப் பயன்பாட்டுத் திறன் வாரியத்தினால் (BWUE) ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு நீர் வள நிலைத்தன்மை மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • ஃபிட் இந்தியா கார்னிவல் எனப்படும் மூன்று நாட்கள் அளவிலான முதலாவது உடற் பயிற்சி மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சியானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • ஹிலால் அகமது, முகமது சஞ்சீர் ஆலம் மற்றும் நஜிமா பர்வீன் ஆகியோரால் எழுதப் பட்டு கடந்த மாதம் வெளியான 'Rethinking Affirmative Action for Muslims in Contemporary India' என்ற ஒரு அறிக்கையானது, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான இது போன்ற முதல் விரிவான கொள்கை சார் ஆவணமாகும்.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் தொழில் நுட்பக் கல்விப் பல்கலைக் கழகத்தில் உள்ள எண்ணிம நெறிமுறைகள் மையத்தினை சுகாதார நிர்வாகத்திற்கான செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த WHO ஒத்துழைப்பு மையமாக நியமித்துள்ளது.
  • மிகப் புகழ்பெற்ற ஒடியா கவிஞரும் முன்னாள் அரசு அதிகாரியுமான இராமகாந்த ராத் சமீபத்தில் காலமானார்.
  • மேவாரின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் HRH என்ற தங்கும் விடுதிகள் குழுமத்தின் தலைவருமான அரவிந்த் சிங் மேவார் சமீபத்தில் காலமானார்.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிலிபிட் புலிகள் சரணாலயம் (PTR) ஆனது, நேபாளத்தைச் சேர்ந்த காண்டாமிருகங்களுக்கான புதிய சரணாலயமாக மாற உள்ளது.
  • இந்தி மொழிக் கவிஞர் ககன் கில் மற்றும் ஆங்கில மொழியில் எழுதும் நாகா மொழி எழுத்தாளர் ஈஸ்டரின் கைர் 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளனர்.
    • திரு. கில் "Main Jab Tak Aai Bahar" எனும் தனது கவிதைப் புத்தகத்திற்கும், திருமதி. கைர் "Spirit Nights" எனும் தனது புதினத்திற்கும் விருதைப் பெற்றுள்ளனர்.

2474 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top