TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 7 , 2025 13 days 89 0
  • சென்னை மற்றும் கோயம்புத்தூரில் செல்லப்பிராணிகளுக்காக என்று  பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான சேர்க்கை ஆணையிலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதனை நிறுத்தி வைத்துள்ளார்.
  • சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் ஒரு சேரச் சேர்ந்து சுமார் 2,200 கோடி ரூபாய்க்கும் அதிகமானச் செயல்பாட்டு வருவாயைப் பதிவு செய்துள்ளன மற்றும் 100 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குக் கையாளும் திறனையும் கடந்துள்ளன.
  • அங்கீகரிக்கப்பட்ட 35 இடங்களில், அசாமின் ஜோகிகோபா, சென்னை, பெங்களூரு, நாக்பூர் மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் 5 பல்முனைத் தளவாடங்கள் பூங்காக்கள் 2025-26 ஆம் நிதியாண்டு மற்றும் 2026-27 ஆம் நிதியாண்டில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சங்கீத நாடக அகாடமியின் ஓர் அலகான கதக் கேந்திரா 37வது கதக் மஹோத்சவ் (2025) நிகழ்ச்சியினை புது டெல்லியில் நடத்தியது.
  • கேரளாவின் கண்ணாடிப்பாய் என்ற ஒரு பழங்குடியினக் கைவினைப் பொருளுக்குப் புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.
  • தாய்லாந்து நாடானது, "BIMSTEC: Prosperous, Resilient and Open" என்ற கருத்துருவின் கீழ் ஆறாவது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதியன்று மக்களவையில் ஒட்டு மொத்தம் 202 பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் பூஜ்ஜிய நேரம் ஆனது ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து புதிய சாதனை பதிவாகியுள்ளது.
    • முன்னதாக, 2019 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று, கால நேரம் நீட்டிக்கப் பட்ட பூஜ்ஜிய நேரத்தில் 161 பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்