தேசியப் பசுமை தீர்ப்பாயம் ஆனது, இரண்டு நாட்கள் அளவிலான 2025 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீ அனந்த்பூர் சாஹிப்பில் உள்ள ஜஜ்ஜர்-பச்சௌலி வனவிலங்கு சரணாலயத்தினை சுற்றுச்சூழல் சார் சுற்றுலா மையமாகவும், பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற் கொள்ளும் வகையிலான முதல் சிறுத்தைப் பூங்காவினையும் உருவாக்க பஞ்சாப் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
‘2030 ஆம் ஆண்டு உலகளாவிய வன மேம்பாட்டுத் தொலைநோக்குத் திட்டம் (GFV): 2025 ஆம் ஆண்டில் அரசாங்கங்களுக்கான முன்னுரிமை நடவடிக்கைகள்’ என்ற அறிக்கை சமீபத்தில் Forest Declaration Assessment எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 320 சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்பு மற்றும் 158 கோல்களுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனையான உத்தரகாண்டினைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா சமீபத்தில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
பெல்ஜியம் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற அசெல்ஹோஃப் CSI லியர் குதிரையேற்றப் போட்டியில் இளம் இந்தியக் குதிரையேற்றத் தடகள வீராங்கனையான நிஹாரிகா சிங்கானியா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) கழகம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தினை “வாடிக்கையாளர் சேவை மாதம்” என்று அறிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆனது, தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் விமான நிலையத்தினைப் பொது விமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) மூன்றாவது ஏவுதளத்தை (TLP) நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 2,000 kN (கிலோ நியூட்டன்) அதிக உந்துதல் கொண்ட பகுதியளவு மீக்குளிர் நிலையிலான இயந்திரம் அல்லது திரவ ஆக்ஸிஜன் / மண்ணெண்ணெய் இயந்திரம் என்பதின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது மார்க்-3 (LVM3) ஏவுதள வாகனத்தின் பகுதியளவு மீக்குளிர் நிலையிலான ஏவுகல உந்திகள் நிலைக்கு ஆற்றல் அளிக்கும்.