மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின் இரண்டு ஆண்டு கால கொண்டாட்டங்களை துவங்குவதற்காக நெதர்லாந்தின் ஹேக் பகுதியில் உள்ள சமாதான அரண்மனையிலிருந்து குரோட் கெர்க் பகுதி வரையிலான ‘காந்தி நடைப்பயணத்தை’ இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
நெவாரி சமூகத்தினரால் 8 நாட்களுக்கு கொண்டாடப்படும் மிக அற்புதமான மற்றும் புகழ்பெற்ற இந்திர ஜாத்ரா திருவிழா 2018 ஆனது நேபாளத்தின் காத்மண்டுவில் தொடங்கப்பட்டது. இத்திருவிழவானது மழை மற்றும் நல்ல அறுவடைக்கான கடவுளான இந்திரனை வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகமானது அதன் தலைநகரமான அபுதாபியில் மத நல்லிணக்க கூட்டணி கருத்துக் களத்தை வரும் நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடத்தவுள்ளது. இந்த கருத்துக் களமானது நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் உலக குழந்தைகள் தினத்துடன் ஒருங்கே அமைகிறது.
மூத்த இந்திய காவல் பணி அதிகாரிகளான ரஜினிகாந்த் மிஸ்ரா மற்றும் S.S. தேஸ்வால் ஆகியோர் முறையே எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security Force) மற்றும் சாஸ்த்ரா சீமா பால் (SSB – Sastra Seema Bal) ஆகியவற்றின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது SSB-யின் தலைவராக உள்ள மிஸ்ரா, K.K ஷர்மாவுக்கு பதிலாகவும் மிஸ்ராவுக்குப் பதிலாக தேஸ்வாலும் பதவியேற்பர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற WAN-IFRA 2018-ன் 26வது மாநாட்டின் 3 வது தெற்காசிய டிஜிட்டல் ஊடக விருது வழங்கும் விழாவில் தி இந்து-வின் கைபேசி செயலியான பிரீஃப்கேஸ் (Briefcase) ஆனது சிறந்த டிஜிட்டல் செய்திகளை வழங்கும் புது நிறுவனத்திற்க்கான வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
வெள்ளிப் பதக்கமானது சாகல் மீடியாவின் அக்ரோவொன் செயலிக்கும் வழங்கப்பட்டது. அதே சமயம் தங்கப் பதக்கத்தை சென்னை கொரியர் செயலியானது வென்றுள்ளது.
கூகுள் நிறுவனமானது அதன் மிக பிரபலமான தேடல்களைக் கொண்ட சிறப்பு டூடுளுடன் தனது 20 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. கூகுளானது செப்டம்பர் 4 அன்று ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று அதன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.