TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2025 12 days 57 0
  • பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான மீட்பு நடவடிக்கைகளில் முதல் நிலை நடவடிக்கை மேற்கொள்ளும் பிரிவிற்கு உதவுவதற்காக என சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது ஒரு கம்பிவட இணைப்பு இல்லாத நிகழ்நேர உட் கட்டமைப்பு வரைபடமாக்கல் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
  • 2025–2027 ஆம் காலக் கட்டத்திற்கான சர்வதேசக் கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் தரநிலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசுகளுக்கிடையேயான நிபுணர் குழுவில் (ISAR) இந்தியாவும் ஓர் அங்கமாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • வங்காளதேச அரசானது, வங்காள விரிகுடா பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் அதன் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு (BIMSTEC) என்ற பிராந்தியக் குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது, இந்தியப் பெருங்கடல் கப்பல் (IOS) SAGAR முன்னெடுப்பின் ஒரு பகுதியாக INS சுனைனா எனப்படும் கடல்சார் ரோந்து கப்பலை அறிமுகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்