சென்னையின் இரண்டாம் விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத்தினைக் கட்டமைப்பதற்கு மத்திய அரசிடமிருந்து முதன்மை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
டெல்லி அரசானது தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்தும் 35வது மாநிலம்/ஒன்றியப் பிரதேசமாக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய ராணுவம் நிலப்பரப்பிலிருந்து வானிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நடுத்தரத் தாக்குதல் வரம்பு கொண்ட எறிகணை (MRSAM) அமைப்பின் இராணுவப் பயன்பாட்டு வடிவத்தின் நான்கு ஏவுதல் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன.
அரியானாவின் ஹிதேஷ் குலியா, 2025 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியக் குத்துச் சண்டை வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரின் மேயரிடமிருந்து லிஸ்பன் நகரத்தின் 'சிட்டி ஆஃப் ஹானர்' என்ற முக்கியக் கௌரவப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.