திராவிட இயக்கத்தின் மறைந்த தலைவர் W.P.A. சௌந்தரபாண்டியன் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசானது அவருக்கு ஒரு மணி மண்டபம் அமைக்க உள்ளது.
இந்திய மணல்சிற்ப கலைஞரான ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், இங்கிலாந்தின் டோர்செட் என்ற நகரில் நடைபெற்ற சாண்ட்வேர்ல்ட் 2025 என்ற ஒரு சர்வதேச மணல் கலை விழாவின் போது மணல்சிற்ப கலைக்குச் சிறந்தப் பங்களிப்பு செய்ததற்காக மதிப்புமிக்க பிரெட் டாரிங்டன் மணல்சிற்ப மாஸ்டர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மின் உற்பத்திக் கழக நிறுவனம் (CSPGCL) ஆனது, கோர்பா மாவட்டத்தில் முதல் உய்ய மிகை நிலை அனல் மின் நிலையத்தினை (SCTPP) அமைக்க உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அவ்வப்போது வெடிக்கும் எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் கன்லான் சமீபத்தில் வெடித்தது.