தமிழ்நாடு அரசானது 2025-2026 ஆம் ஆண்டு முதல் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் நிரலாக்கம் குறித்த ஒரு அடிப்படைக் கல்வியினை அறிமுகப் படுத்த உள்ள நிலையில் தமிழ்நாட்டினை இந்தியாவில் முதல் மாநிலமாக இது மாற்ற உள்ளது.
நிபா வைரசின் சுய-பெருக்க தூது ரிபோநியூக்ளிக் அமிலம் (saRNA) வகை தடுப்பூசியை உருவாக்கச் செய்வதற்காக வேண்டி ஒரு கூட்டு முன்னெடுப்பினை ஜெனோவா பயோ ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனமானது, செயற்கை நுண்ணறிவு செயலிகளின் செயல்திறனை நன்கு விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அயர்ன்வுட் எனப்படுகின்ற அதன் ஏழாவது தலைமுறை நுட்பத்திலானச் செயற்கை நுண்ணறிவுச் சில்லினை அறிமுகப் படுத்தி யுள்ளது.
அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM) ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள துபாயில் அதன் முதல் அயல்நாட்டு வளாகத்தினை நிறுவ உள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்தியாவிற்கான தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தினை மிகச் சமீபத்தில் மேற் கொண்டார்.