சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் புத்தொழில் நிறுவனமான பிளக்ஸ்மார்ட், கனரக வாகனங்களுக்கான மின்சார வாகனங்களுக்கான விரைவான மின்னேற்றியினை உருவாக்கியுள்ளதோடு மேலும், இந்திய வாகன நுட்ப ஆராய்ச்சிக் கூட்டமைப்பிடமிருந்து இதற்கான முதன்மைச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் புத்தாக்கத் தொழில் நிறுவனமும் இதுவாகும்.
பெங்களூவில் உள்ள கட்டணச் சேவை நுட்பம் சார்ந்த உள்கட்டமைப்புச் சேவை வழங்குநரான ஜஸ்பே (Juspay) என்ற நிறுவனமானது, 60 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைப் பெற்றதையடுத்து, 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனமாக மாறியுள்ளது.
சீனாவைத் தவிர, இந்தியா மீது விதிக்கப்பட்ட 26% வரி உட்பட மற்ற நாடுகள் மீதான சுங்க வரி விதிப்பில் 90 நாள் இடைநிறுத்த காலத்தினை டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார்.