‘டிஜி கேரளா’ எண்ணிமக் கல்வியறிவு திட்டத்தின் உதவியுடன் முழுமையான டிஜிட்டல் கல்வியறிவை அடைந்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
கேரளாவின் முதலமைச்சர் தர்மடம் என்ற பகுதியினை அம்மாநிலத்தின் மோசமான வறுமை இல்லாத முதல் தொகுதியாக அறிவித்துள்ளார் என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 01ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் மோசமான வறுமை நிலையை முழுமையாக ஒழிக்க வழி வகுக்கும்.
பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபரால் அந்நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ‘இலங்கை மித்ர விபூஷணா’ வழங்கப்பட்டுள்ளது.
நமது உள்ளார்ந்தத் தார்மீக திசைகாட்டியின் முக்கியத்துவம், முக்கியத் தனிநபர்கள் அவர்களுடைய மதிப்புகள், செயல்கள் மற்றும் அவர் பொறுப்புகளைப் பற்றி சிந்திக்க அவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 05 ஆம் தேதியன்று சர்வதேச மனசாட்சி தினமானது அனுசரிக்கப்படுகிறது.
மேம்பாடு மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று "விளையாடும் களத்தை சமன் செய்தல்: சமூக உள்ளடக்கத்திற்கான விளையாட்டு" என்ற கருத்துருவின் கீழ் அனுசரிக்கப்பட்டது.
ரோமானியக் கலாச்சாரத்தை மிகவும் நன்கு கொண்டாடவும், ரோமானியச் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி சர்வதேச ரோமானி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 08 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.