TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 17 , 2025 4 days 57 0
  • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஏழாவது பெரிய பஞ்சாப் பால் கூட்டுறவு நிறுவனமான மில்க்ஃபெட் என்பது, 'வெர்கா' எனும் அதன் பால் உற்பத்தி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகளை மிக நன்கு பிரபலப்படுத்துவதற்கும் நாடு முழுவதும் அதன் விற்பனையை அதிகரிப்பதற்கும் 'வீரா' எனும் உருவச் சின்னத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட பொது விமானத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான சரஸ் Mk2 ஆனது, 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்படத் தயாராகி வருகிறது.
  • வங்க தேசத்திலுள்ள இந்திய உயர் ஆணையரகத்தின் கலாச்சாரப் பிரிவான இந்திரா காந்தி கலாச்சார மையம் ஆனது, டாக்காவில் உள்ள இந்தியக் கலாச்சார மையத்தில் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான சபையின் (ICCR) 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
  • மத்தியப் பிரதேச மாநில அரசு ஆனது, சாகர் மாவட்டத்தில் ஒரு புதிய வனவிலங்குச் சரணாலயத்தினை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அபயரான் எனும் பெயரில் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பின் (ISSF) 2025 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் கட்டத்தில், சீனாவிற்கு அடுத்தபடியாக 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • 2035 ஆம் ஆண்டு FIFA மகளிர் உலகக் கோப்பை போட்டியினை நடத்த ஐக்கியப் பேரரசு தயாராக உள்ளது.
  • அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதி அருகே அமைந்துள்ள, கடந்த 5000 ஆண்டுகளாக வெடிக்காத ஒரு எரிமலை ஆன, மவுண்ட் ஸ்பர்ர் சமீபத்தில் மிகவும் தீவிரமாக வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்