TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 29 , 2018 2252 days 700 0
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளின் இரண்டு ஆண்டு கால கொண்டாட்டங்களை துவங்குவதற்காக நெதர்லாந்தின் ஹேக் பகுதியில் உள்ள சமாதான அரண்மனையிலிருந்து குரோட் கெர்க் பகுதி வரையிலான ‘காந்தி நடைப்பயணத்தை’ இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
  • நெவாரி சமூகத்தினரால் 8 நாட்களுக்கு கொண்டாடப்படும் மிக அற்புதமான மற்றும் புகழ்பெற்ற இந்திர ஜாத்ரா திருவிழா 2018 ஆனது நேபாளத்தின் காத்மண்டுவில் தொடங்கப்பட்டது. இத்திருவிழவானது மழை மற்றும் நல்ல அறுவடைக்கான கடவுளான இந்திரனை வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது.
  • ஐக்கிய அரபு அமீரகமானது அதன் தலைநகரமான அபுதாபியில் மத நல்லிணக்க கூட்டணி கருத்துக் களத்தை வரும் நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடத்தவுள்ளது. இந்த கருத்துக் களமானது நவம்பர் 20 அன்று கொண்டாடப்படும் உலக குழந்தைகள் தினத்துடன் ஒருங்கே அமைகிறது.
  • மூத்த இந்திய காவல் பணி அதிகாரிகளான ரஜினிகாந்த் மிஸ்ரா மற்றும் S.S. தேஸ்வால் ஆகியோர் முறையே எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security Force) மற்றும் சாஸ்த்ரா சீமா பால் (SSB – Sastra Seema Bal) ஆகியவற்றின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தற்போது SSB-யின் தலைவராக உள்ள மிஸ்ரா, K.K ஷர்மாவுக்கு பதிலாகவும் மிஸ்ராவுக்குப் பதிலாக தேஸ்வாலும் பதவியேற்பர்.
  • ஹைதராபாத்தில் நடைபெற்ற WAN-IFRA 2018-ன் 26வது மாநாட்டின் 3 வது தெற்காசிய டிஜிட்டல் ஊடக விருது வழங்கும் விழாவில் தி இந்து-வின் கைபேசி செயலியான பிரீஃப்கேஸ் (Briefcase) ஆனது சிறந்த டிஜிட்டல் செய்திகளை வழங்கும் புது நிறுவனத்திற்க்கான வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
    • வெள்ளிப்  பதக்கமானது சாகல் மீடியாவின் அக்ரோவொன் செயலிக்கும் வழங்கப்பட்டது. அதே சமயம் தங்கப் பதக்கத்தை சென்னை கொரியர் செயலியானது வென்றுள்ளது.
  • கூகுள் நிறுவனமானது அதன் மிக பிரபலமான தேடல்களைக் கொண்ட சிறப்பு டூடுளுடன் தனது 20 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. கூகுளானது செப்டம்பர் 4 அன்று ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று அதன் பிறந்த நாளைக்  கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்