TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 7 , 2018 2113 days 633 0
  • உலக பொருளாதார மன்றத்தால் (WEF - World Economic Forum) சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘இந்தியாவில் எதிர்கால வேலை’ என்ற அறிக்கையின்படி இந்தியாவில் அதிக வளரச்சியை எதிர்நோக்கும் நிறுவனங்களானது வருங்காலத்தில் பெண்களை விட ஆண்களை பணியமர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிகிறது.
    • இந்த அறிக்கையானது WEF மற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) மூலம் தயாரிக்கப்பட்டது.
  • புவனேஸ்வரில் நடைபெற்ற 58வது தேசிய ஓபன் தடகள சாம்பயின்ஷிப் போட்டிகளின் ஆண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் பந்தயத்தில் அவினாஷ் சபில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். 1981 ஆம் ஆண்டில் கோபால் சைனியின் சாதனையை இவர் முறியடித்தார்.
  • நாட்டின் அச்சு தொழில் நுட்பத்தின் உச்ச அமைப்பான ‘இந்திய செய்தித்தாள் சங்கத்தின்’ (Indian Newspaper Society) தலைவராக மலையாள மனோரமாவின் நிர்வாக ஆசிரியரான ஜெயந்த் மம்மென் மேத்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இவர் பிசினஸ் ஸ்டான்டார்டு நிறுவனத்தின் அகிலா உரங்கர்-ஐ அடுத்து பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்