TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2018 2243 days 657 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதியன்று ஐசிஐசிஐ வங்கியின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநரான சந்தா கோச்சர், தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக (100 Chief Operation Officer) நியமிக்கப்பட்ட சந்தீப் பக்ஷி, ஐசிஐசிஐ வங்கியின் புதிய மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் 2023 ஆண்டு அக்டோபர் 3 வரை 5 வருட காலத்திற்கு இப்பதவியில் நீடிப்பார்.
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கும் மூத்த இராஜ்ஜிய அதிகாரியான சஞ்சய் வெர்மா ஸ்பெயினுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குரோஷியக் குடியரசுக்கான இந்தியத் தூதராக அரிந்தம் பக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சமீபத்தில் இந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளின் மாணவர்களுக்கிடையே புத்தாக்க ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் இரஷ்ய கூட்டமைப்பின் சைரஸ் (SIRIUS) ஆகிய இரண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய தேசிய பங்குச் சந்தையின் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான விக்ரம் லிமாயே, சர்வதேச தொழிற்துறை அமைப்பான சர்வதேச சந்தைக் கூட்டமைப்பினால் (WFE - World Federation of Exchange) அம்மன்றத்தின் இயக்குநர் மற்றும் பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இம்முடிவு கிரீஸ் நாட்டில் ஏதென்ஸில் நடைபெற்ற சர்வதேச அமைப்பின் 58வது பொதுச் சபை மற்றும் வருடாந்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
  • அக்டோபர் 05 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றார். அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் -ஆல் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
  • இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் 10-வது பதிப்பான “இந்தியா செம் 2018” மும்பையில் நடைபெற்றது. இது இந்தியாவில் இரசாயனம் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தொழிற்துறையின் மிகப்பெரிய நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6 வரை நடைபெற்றது.
  • புகழ்பெற்ற சர்வதேச குளிர்பான நிறுவனமான பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக (6-வது) ராமோன் லகுவார்டா பொறுப்பேற்றார். இதற்குமுன் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவில் பிறந்த இந்திரா நூயி 12 ஆண்டுகள் பதவி வகித்தார்.
    • பெப்சிகோ நிறுவனம் தொடங்கி 41 ஆண்டு கால வரலாற்றில் இந்திரா நூயி 2006 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் 5-வது தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அந்நிறுவனத்தின் முதலாவது பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் இந்திரா நூயி ஆவார்.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சிம்லாவில் “தடுப்புக் காவலில் பெண்கள் மற்றும் நீதிக்கான அணுகல்” மீதான முதலாவது பிராந்தியக் கருத்தரங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (BPR & D - Bureau of Police Research and Development) நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கு இமாச்சலப் பிரதேச சிறைத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
  • சமீபத்தில் காவல் நிலையத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியதற்காகவும் தூய்மையைப் பராமரித்ததற்காகவும் வடபழனி காவல் நிலையத்திற்கு ISO தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின்படி, உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அலைபேசிகளில் பொருத்தப்பட்டுள்ள “அவசர கால பொத்தான்” (Panic button) சோதனைத் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்