TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 11 , 2018 2109 days 596 0
  • சர்வதேச கிரிக்கெட் குழுமமானது (ICC - International Cricket Council) ஆட்ட நிபந்தனைகளை மேம்படுத்தப்பட்ட டக்வொர்த்-லெவிஸ்-ஸ்டென் (DLS/ Duckworth-Lewis-Stern) முறைகளுடன் புதிய ICC நடத்தை விதிமுறைகள் மற்றும் ICC விளையாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • இது செப்டம்பர் 30 அன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கிடையே கிம்பெர்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடைமுறைக்கு வந்தது.
  • Paytm ஆனது செப்டம்பர் மாதத்தில் 13 மில்லியன் UPI பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த சந்தைப் பங்குகளில் 33% உடன் ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுக (UPI - Unified Payments Interface) செலுத்தல்களில் முன்னணிப் பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது.
  • விளக்குடன் பெண் என்று அறியப்படும் ‘நம்பிக்கையின் ஒளி’ (Glow of Hope) உருவப்பட ஓவியத்தில் விளக்கை வைத்திருக்கும் பெண்மணி தனது 102வது வயதில் காலமானார்.
  • மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அசாம் மாநிலமானது இந்தியாவின் மூன்றாவது பெரிய மற்றும் நகரத்தின் சராசரி உயரத்திலிருந்து மிகவும் உயர்ந்த தேசியக் கொடியை பறக்க விட்டது.
    • நகரத்தின் சராசரி உயரத்திலிருந்து 319.5 அடி உயர கொடிக் கம்பமான இது நாட்டின் மிக உயரமானது ஆகும்.
  • கூகுள் நிறுவனமானது அதன் அதிகமாக பயன்படுத்தப்படாத சமூக வலைதளமான கூகுள் பிளஸ்ஸின் (Google +) நுகர்வோர் பதிப்பை மூடவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்