TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 13 , 2018 2238 days 685 0
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG - Sustainable Development Goals) இந்தியாவின் முதலாவது ஐக்கிய நாடுகளின் இளம் வணிக சாம்பியனாக கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான மானாசி கிர்லோஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய “வண்ணத்துப்பூச்சி” என்று இந்தியில் பொருள் கொண்ட “டிட்லி“ புயல் “மிகவும் கடுமையான சூறாவளிப் புயல்“ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையேயான “2 + 2” செயலாளர் நிலையிலான பேச்சுவார்த்தையின் 2-வது பதிப்பு கான்பெராவில் நடைபெற்றது.
  • புது தில்லியில் 29 வது கணக்குத் தணிக்கையாளர் மாநாடு (Accountant General Conference) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஆல் தொடங்கி வைக்கப்பட்டது. இரு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கானது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller and Auditor General of India) ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்