மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (Ministry of Environment and Forests and Climate Change - MoEFCC) மற்றும் உலக வங்கி ஆகியவை கூட்டாக இணைந்து ‘நாட்டில் காட்டுத்தீ மேலாண்மையை வலுப்படுத்துதல்’ மீதான அறிக்கையை வெளியிட்டன.
தேசிய, மாநில மற்றும் உள்ளூர் நிலைகளில் காட்டுத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை மீதான கொள்கைகள் குறித்து இந்த அறிக்கை விவாதிக்கிறது.
2018 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் “விஷன் விருது” ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட “சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க பொருளாதாரத்தின்” (TEEB- The Economics of Ecosystem and Biodiversity) முன்முயற்சியான “TEEBAgriFood” என்ற முயற்சிக்கு வழங்கப்பட்டது.
TEEBAgriFood ஆனது உணவு முறைகளை மேலும் துல்லியமாக மதிப்பிடுவதற்காக விரிவான மதிப்பாய்வு செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டின் முதலாவது தொழில்முனைவு தொழில்நுட்ப மையமான இந்திய - இஸ்ரேல் புத்தாக்க மையம் (IIIC - India - Israel Innovation Centre) பெங்களூருவில் தொடங்கப்பட்டது. IIIC என்பது இந்தியாவில் இஸ்ரேல் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
ஜம்முவில் உள்ள ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUJ - Central University of Jammu) விண்வெளி அறிவியலுக்கான சதீஷ் தவான் மையம் அமைப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்த வகையான மையம் அமைவது இதுவே முதல்முறையாகும்.