புது தில்லியின் பிரகதி மைதானில் இந்திய சர்வதேச ஜவுளி கண்காட்சியானது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியால் தொடங்கி வைக்கப்பட்டது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR - National Commission for Protection of Child Rights) புதிய தலைவராக பிரியங்க் கானூங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றுவார். சமீபத்தில் இப்பதவி வகித்த ஸ்துதி காக்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், 2005-ன் கீழ் 2007 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மூலம் இயற்றப்பட்ட சட்டத்தினால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. NCPCR ஆனது தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பாகும்.
இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான மும்முனை ஒத்துழைப்பின் கீழ் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து முதலாவது கூட்டுத் திட்டமான ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கின.