TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 18 , 2018 2233 days 654 0
  • மைக்ரோசாப்டின் இணை நிறுவனரான பால் ஆலன் தனது 65வது வயதில் காலமானார்.
  • ஹெம்டி குளோபல் என்ற நிறுவனம் இந்தியாவில் நோக்கியா கைபேசிகளுக்கான தூதராக பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நியமித்திருக்கின்றது.
    • ஹெம்டி குளோபல் ஆனது நோக்கியா பிராண்டுகளின் கீழ் கைபேசிகளின் வடிவமைப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்கிறது.
  • ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட, நுகர்வோருக்கான டிஜிட்டல் கடன் தளமான கிரெடிடெக் நிறுவனம் இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்துப் பெற்றுள்ளது.
  • சந்தா கோச்சாரின் ராஜினாமாவிற்குப் பிறகு, ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு சந்தீப் பக்ஷியின் நியமனத்தை இந்திய ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்திற்கு அங்கீகரித்து இருக்கின்றது.
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை நாயகரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு (2018 அக்டோபர் 15) “கலாமின் பார்வை - கனவிற்கான தைரியம்” என்ற கருத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் இணைய தளத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார்.
  • ஆசியாவிலிருந்து அதிகபட்சமாக ரன்கள் குவித்த டெஸ்ட் போட்டிக்கான அணித் தலைவராக பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக்கை விராட் கோலி முந்தினார்.
  • வங்கிகளில் வைப்புத் தொகையாக உள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை அணுகிட சுவிட்சர்லாந்திற்குப் பிறகு லிச்டென்ஸ்டீன் நாட்டுடன் நிதிக் கணக்குத் தகவல்களுக்கான தானியங்கி பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.
  • பருவநிலை மற்றும் பேரிடர் பாதிப்புகளால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் ஜெர்மனி மற்றும் ஐக்கியப் பேரரசு அரசுகள் ஒரு புதிய உலகளாவிய பேரிடர் தடுப்பு நிதி வசதியை ஆரம்பித்திருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்