சமூக தொழில் முனைவரான சுஹைல் F. தாண்டன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு மற்றும் சமூக செயற்சங்க குழுவின் கிராண்ட் விருதினை தனது விளையாட்டு அபிவிருத்திற்கான பங்களிப்பிற்காக வென்றுள்ளார்.
இவர் ப்ரோ ஸ்போர்ட் டெவலப்மெண்ட் (PSD - Pro Sport Development) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மார்த்தா ஃபரேல் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
நோக்கியாவின் சென்னை ஆலையில் அதிக திறன் வாய்ந்த செயல்பாட்டுத் திறனை செயல்படுத்துவதற்காக 4G LTE தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மற்றும் ஆலையை 5G சகாப்தத்திற்காக ஸ்மார்ட் தயாரிப்புடன் உருவாக்குவதற்காகவும் நோக்கியாவும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட்டிணைவதாக அறிவித்துள்ளன.
துப்புரவு, குடிநீர், சுகாதாரம், குழந்தைகள் நலம், மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக நீலகிரி மாவட்டமானது JRD டாடா நினைவு விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருதானது 1997 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கவுரவிப்பதற்காக இந்திய மக்கள் தொகை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரான நாரயண் தத் திவாரி தனது 93வது வயதில் புது டெல்லியில் காலமானார். இரண்டு மாநிலங்களில் முதல்வராக பணியாற்றிய ஒரே அரசியல்வாதி இவரேயாவார்.
இவர் உத்திரப் பிரதேசத்தில் மூன்று முறை முதல்வராகவும் உத்தரகண்ட் மாநிலத்தின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகவும் இருந்தவராவார். இவரது பிறந்த தேதியும் இறந்த தேதியும் ஒன்றாகும்.
‘பிராக்ரிதி’ திட்டத்தைத் துவங்குவதற்காக இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியல் மன்றமானது (ICFRE - Indian Council of Forestry Research and Education) கேந்திரிய வித்யாலா சங்கதன் (KVS - Kendriya Vidyalaya Sangathan) மற்றும் நவோதயா வித்யாலா சமிதி (NVS - Navodaya Vidyalaya Samiti) ஆகியோருடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் 10 ஆண்டு காலத்திற்கு கையெழுத்தாகியுள்ளன.