டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான ஜெமால்ட்டோ ஆனது பொதுமக்கள் தரவு மீறல்களின் நிலை குறித்த உலகளாவிய தரவு தளமான மீறல் நிலை குறியீட்டின் (Breach Level Index) சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீடானது தரவு மீறல் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் இந்தியாவை மதிப்பிட்டுள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவின் செங்டு பகுதியில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஹேண்ட்-இன்-ஹேண்ட் இராணுவப் போர் பயிற்சியின் 7வது பதிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. 2017-ம் ஆண்டில் டோக்லாம் சிக்கலுக்கு பிறகு இந்த வருடாந்திரப் பயிற்சியானது ரத்து செய்யப்பட்டது.
காங்கிரஸின் தவைர்களில் ஒருவரான சசிதரூர் தனது புதிய புத்தகமான ‘முரண்பாடான பிரதம அமைச்சர்’ என்ற புத்தகத்தை “ப்ளோச்சிநௌசினிஹிலிபிலிஃபிகேஷன்” என்ற 29 எழுத்துக்கள் கொண்ட வார்த்தையுடன் அறிமுகப்படுத்தினார்.
இந்த floccinaucinihilipilification என்ற வார்த்தையானது ஏதேனும் ஒன்றை மதிப்பற்றது என மதிப்பிடும் நடவடிக்கை அல்லது பழக்கம் என பொருள்படும்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாரா ஆசியன் விளையாட்டுகள் 2018ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த K. ஜெனிதா அண்டோ பெண்கள் ஒற்றையர் பிரிவு விரைவு P1 சதுரங்க போட்டியில் இந்தோனேசியாவின் மனுரங்க் ரோஸ்லிண்டாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானத்தின் (ம.பொ.சி) சுயசரிதையான ‘எனது போராட்டம்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் சென்னையில் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர்கள் ம.பொ.சி மற்றும் சிலம்பு செல்வர் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.