TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 20 , 2018 2100 days 622 0
  • டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான ஜெமால்ட்டோ ஆனது பொதுமக்கள் தரவு மீறல்களின் நிலை குறித்த உலகளாவிய தரவு தளமான மீறல் நிலை குறியீட்டின் (Breach Level Index) சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீடானது தரவு மீறல் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் இந்தியாவை மதிப்பிட்டுள்ளது.
  • டிசம்பர் மாதம் சீனாவின் செங்டு பகுதியில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஹேண்ட்-இன்-ஹேண்ட் இராணுவப் போர் பயிற்சியின் 7வது பதிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. 2017-ம் ஆண்டில் டோக்லாம் சிக்கலுக்கு பிறகு இந்த வருடாந்திரப் பயிற்சியானது ரத்து செய்யப்பட்டது.
  • காங்கிரஸின் தவைர்களில் ஒருவரான சசிதரூர் தனது புதிய புத்தகமான ‘முரண்பாடான பிரதம அமைச்சர்’ என்ற புத்தகத்தை “ப்ளோச்சிநௌசினிஹிலிபிலிஃபிகேஷன்” என்ற 29 எழுத்துக்கள் கொண்ட வார்த்தையுடன் அறிமுகப்படுத்தினார்.
    • இந்த floccinaucinihilipilification என்ற வார்த்தையானது ஏதேனும் ஒன்றை மதிப்பற்றது என மதிப்பிடும் நடவடிக்கை அல்லது பழக்கம் என பொருள்படும்.
  • சமீபத்தில் நடந்து முடிந்த பாரா ஆசியன் விளையாட்டுகள் 2018ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த K. ஜெனிதா அண்டோ பெண்கள் ஒற்றையர் பிரிவு விரைவு P1 சதுரங்க போட்டியில் இந்தோனேசியாவின் மனுரங்க் ரோஸ்லிண்டாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானத்தின் (ம.பொ.சி) சுயசரிதையான ‘எனது போராட்டம்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் சென்னையில் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர்கள் ம.பொ.சி மற்றும் சிலம்பு செல்வர் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்