TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 22 , 2018 2098 days 591 0
  • பிரதம அமைச்சர் புதுதில்லியில் தேசிய காவல்துறை நினைவு தின விழாவின்போது (அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்பட்டது) தேசிய காவலர் நினைவகத்தை திறந்து வைத்து (NPM - National Police Memorial) நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • இந்திய அமெரிக்கரான மினல் படேல் டேவிஸ் ஆள் கடத்தலை எதிர்த்து போராடியதற்காக ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆட்கடத்தலுக்கு எதிராக மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக அமெரிக்க செயலாளர் மைக் போம்பியோவால் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
    • இது இந்தத் துறையில் அமெரிக்காவின் உயரிய விருதாகும்.
  • கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (Shanghai Cooperation Organisation - SCO) உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்களுக்கிடையேயான 7வது கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்