2018ம் ஆண்டின் WETEX கண்காட்சி (WETEX - Water, Energy, Technology and Environment Exhibition/ நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் கண்காட்சி) துபாயில் உள்ள துபாய் சர்வதேச கண்காட்சி மையத்தில் தொடங்கியிருக்கின்றது.
சர்வதேச நடனத் திருவிழாவான ‘உத்பாவ் உத்சவ்‘ (2018) என்பதின் 15வது பதிப்பு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் நடத்தப்பட்டது.
இந்திய அரசானது பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான விவகாரங்கள் தொடர்பான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடைமுறைகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இக்குழு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் தலைமை தாங்கப்படும்.
குடியரசுத் தலைவர் டெல்லியில் சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் - 2018 என்ற மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் புது தில்லியில் 10வது அணுசக்தி மாநாட்டை துவக்கி வைத்தார். இதற்கான கருத்துரு - “அணுசக்தி - சுத்தமான மற்றும் அடிப்படையான ஆற்றல்” என்பதாகும்.
இது இந்திய ஆற்றல் மன்றத்தால் (Indian Energy Forum – IEF) ஏற்பாடு செய்யப்பட்டது.
நாசா விஞ்ஞானிகள் 21 கூறுகள் கொண்ட ஒரு புதிய அதி நவீன காமாக் கதிர்கள் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். அதற்கு கற்பனைக் கதாபாத்திரங்களின் பெயர்களான ஹல்க் மற்றும் காட்ஜில்லா என்று பெயரிட்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற மைல்கற்களான வாசா என்ற சுவீடனின் மீட்டெடுக்கப்பட்ட போர்க் கப்பல், வாஷிங்டன் நினைவுச் சின்னம் மற்றும் ஜப்பானின் ப்யூஜி எரிமலை போன்றவைகளையும் இப்பெயர்கள் கொண்டிருக்கும்.
மியான்மர் ஒன்றியக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக சௌரப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் இவர் ஈரானின் இந்தியத் தூதராக உள்ளார். இவர் விக்ரம் மிசிரி என்பவருக்குப் பதிலாக பதவியேற்பார்.
சதீஷ் குமார் குப்தா PayTM நிறுவன பணமளிப்பு வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரேணு சாட்டி என்பவருக்குப் பதிலாக பதவியேற்பார்.
அரியானா மாநில அரசு நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளை அளிக்க “பசு சஞ்சீவனி சேவா” என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
முன்னாள் பிரதமர் H.D. தேவ கவுடா அக்டோபர் 24-ம் தேதியன்று வால்மீகி ஜெயந்தி நிகழ்ச்சியின் போது கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் மகரிஷி வால்மீகி ஜெயந்தி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகத்தினருக்கு செய்த நன்மைகளுக்கான பங்களிப்பின் காரணமாக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி 5 ஆண்டுக் காலத்திற்கு TVS மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக K.N. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
2018 ஆம் ஆண்டின் உலகளாவிய விவசாயத் தலைமைக்கான மாநாடு புது தில்லியில் துவங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருத்துரு : “சந்தையுடன் விவசாயிகளை இணைத்தல்” என்பதாகும்.
பிரதமர் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் 36வது இந்திய தரைவிரிப்புகள் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.