சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டிணைவின் (IATA - International Air Transport Association) 20வது ஆண்டு விமானப் பயணிகள் முன்னறிவிப்பு அறிக்கையின்படி 2024-ம் ஆண்டில் உலகின் முதல் 3 விமானப் பயணச் சந்தையில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும். தற்போது உலகளாவிய விமானப் போக்குவரத்துச் சந்தையில் இந்தியாவானது 7வது இடத்தில் உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவை தன்னிச்சையான இயக்குநராக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் ஜனவரி 1, 2019 முதல் தொடங்கி அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும்.
இவர் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தன்னிச்சையான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் 16 லட்சம் அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவங்கி தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.