TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2018 2214 days 674 0
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நவம்பர் 8 அன்றிலிருந்து முதல் அமர்விற்கு தலைமை தாங்குவது மற்றும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நிர்வாக நீதிபதியாக இருக்கப் போவது நீதிபதி K.K. சசிதரன் ஆவார்.
  • 96 வயதுடைய பெண்மணியான கார்த்தியாயினி அம்மா கேரளாவில் அக்சர லக்சம் என்ற எழுத்தறிவுத் தேர்வில் 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
  • 33 வயதான பாகிஸ்தான் அணியின் மூத்த மட்டையாளர் அசார் அலி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
  • இந்திய இணையதள மற்றும் கைபேசி சங்கம் (Internet and Mobile Association of India - IAMAI) இந்தியாவில் மெய்நிகர் உண்மைத் தோற்றம்/ அதிகப்படுத்தப்பட்ட உண்மை தோற்றம் ஆகியவற்றுக்கான சூழலை மேம்படுத்தி உருவாக்கிட ஒரு புதிய தொழில் நிபுணர் குழுவை அமைத்திருக்கின்றது.
    • இந்த குழுவானது நாட்டில் வளர்ந்துவரும் அந்த தொழில்நுட்பத்தின் திறமைகளைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பிரபலப்படுத்திட இந்த சங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
  • இந்திய ராணுவத்தின் ஈட்டிப் படைகளின் சார்பில் வடக்கு இம்பாலில் உள்ள மந்திரிபுகாரி ராணுவ தளத்தில் 13வது இந்திய-மியான்மர் பிராந்திய எல்லைக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
  • உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். டெக்ராடூனில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
  • மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற்துறை வளர்ச்சிக்கும், வாழ்க்கைத் தரத்தின் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் “துர்கா உந்து விசையளிக்கப்பட்ட சேமிப்புக் கிடங்கிற்கான கட்டுமானத் திட்டம்” என்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டன.
  • இம்பாலில் உள்ள உயிரியல் வளம் மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான நிறுவனத்துடன் மேகாலயா அரசும் கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுவும் இணைந்து நவம்பர் 8 முதல் 11-ம் தேதி வரை ஷில்லாங்கில் இந்திய சர்வதேச செர்ரி மலர் திருவிழாவை, தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக நடத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்