18-வது இந்தியப் பெருங்கடல் கரையோர கூட்டிணைவு அமைப்பின் அமைச்சரவைக் குழுவினுடைய கூடுகை தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
இந்த கூடுகையானது மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் மற்றும் நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்களையொட்டி நடைபெற்றது.
உத்திரப் பிரதேச முதல்வர் மற்றும் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜிங்க்-சூக் ஆகியோர் இணைந்து அயோத்தியாவின் ஹுயு ராணி பூங்காவில் ஹுயு ராணியின் நினைவகத்தைத் திறந்து வைத்தனர்.
பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட வாடகைக் கார் நிறுவனமான ஓலா (OLA) தனது செயல்பாட்டினை நியூசிலாந்தில் அதிகாரப் பூர்வமாக தொடங்கி ஆக்லாந்து, வெல்லிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய பகுதிகளில் சவாரியை வழங்குகிறது.
இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் ஓலா தனது செயல்பாடுகளைத் தொடங்கிய பின்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமானது (BBC - British Broadcasting Corporation) இந்தியா போன்ற நாடுகளில் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் விவாதங்கள் உட்பட உலகளாவிய செய்தி ஊடகங்களில் முக்கிய கவனம் செலுத்துவதன் மூலம் தவறான செய்திகள் மற்றும் போலிச் செய்திகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதை இலக்காகக் கொண்ட புதியப் பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளது.