TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2017 2572 days 964 0
  • ‘அப்புசாமி, சீதாப்பாட்டி’ என்ற சித்திர கதாபாத்திரங்களை உருவாக்கிய எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைந்தார். பாக்கியம் ராமசாமியின் இயற்பெயர் ஐ.ரா. சுந்தரேசன் (ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன்) என்பதாகும். இவர் 40 ஆண்டுகாலம் ‘குமுதம்’ தமிழ் வார இதழில் பணியாற்றி 1990-இல் இணை ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர்.
  • ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமண மசோதா நிறைவேற்றப்பட்டது. தன் பாலின திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் ஆஸ்திரேலியா 26வது நாடாகும். இந்த சட்ட முன்வரைவினை லிபரல் உறுப்பினர் தீன் ஸ்மித் உருவாக்கினார்.
  • 1977 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியாளர் பிரிவினைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எம்.ஷீலா ப்ரியா தமிழகத்தின் தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்